ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், இஐசிஎம்ஏ கண்காட்சி அரங்கில் புதிய ஹோண்டா ரீபெல் 300 மற்றும் ஹோண்டா ரீபெல் 500 பைக்குகள் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா இந்தியாவில் பல புதிய பிரீமியம் பைக்குகளை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அவற்றில், சில இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யவும் உள்ளது. பிரீமியம் மாடல்களில் இந்த இரு பைக்குகளை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.
இரண்டு க்ரூஸர் மாடல்களின் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. சிபிஆர்300 ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள 286cc திறன் பெற்ற என்ஜின் 27 HP பவர் மற்றும் 27 NM டார்க்கினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், 500சிசி என்ஜின் பெற்ற ரீபெல் 500 அதிகபட்சமாக 46 HP பவர் மற்றும் 43 NM டார்க்கினை வழங்குவதுடன் கூடுதலாக சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.
இரு மாடல்களும் ஹோண்டாவின் மிக முக்கியமானவையாகும். 2020 ஆம் ஆண்டு மாடல் சிறிய அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரீபெல் மாடல்களுக்கு ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கிடைக்கிறது. இது ஹோண்டா அறிக்கையில் கிளட்ச் முயற்சியை 30 சதவீதம் வரை குறைக்கிறது. கியர் நிலை மற்றும் எரிபொருள் அளவைக் காட்டும் புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் ஹோண்டா ரீபெல் 300 மற்றும் ஹோண்டா ரீபெல் 500 மாடல்கள் விற்பனைக்கு நேரடியாக என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350, 500 மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் உட்பட ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக அமையும். உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட உள்ளதால் விலை குறைவாக அமைந்திருக்கும்.