பிஎஸ்6 மாசு விதிகளுக்கு ஏற்ப ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் ஹீரோ கிளாமர் பைக்கிற்கான டீசரை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து நாளை இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி 2019 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச அளவில் ஹங்க் 200ஆர் மற்றும் இக்னைட்டர் 125 என்ற பெயரில் யூரோ 5 மாசு விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்பே இந்நிறுவனத்தின் பிரபலமான ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் பிஎஸ்6 நுட்ப விபரங்களை வெளியானதை தொடர்ந்து, இஐசிஎம்ஏ கண்காட்சியில் பிஎஸ்6 மாடல்களை காட்சிப்படுத்த உள்ளதால், இந்த மாடல்கள் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கலாம். மேலும், பிஎஸ்6 எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகளும் வெளியாகலாம்.
டீசர் வீடியோ ஒன்றின் வாயிலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மட்டும் பெற்ற 199.6 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.4 பிஹெச்பி குதிரைத் திறன் மற்றும் 17.1 என்எம் முறுக்குவிசை வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது. அதே நேரத்தில் ஹீரோ கிளாமர் பைக்கில் 124 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டிருக்கும்.
இதுதவிர, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் மற்றொரு புதிய மாடலை இந்த ஆண்டு இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளது. நாளை ஹீரோ மோட்டோகார்ப் தனது மாடல்களை வெளியிட உள்ளது.