பெரும்பாலான பயணிகள் வாகன தயாரிப்பாளர்கள் சரிவினை சந்தித்துள்ள நிலையில் ரெனால்ட் இந்தியா நிறுவனம், 2019 அக்டோபர் மாதத்தில் 62.8 % வளர்ச்சியை பதிவு செய்து மொத்தமாக 11,500 கார்களை விற்பனை செய்துள்ளது. புதிய அறிமுகங்களான ரெனால்ட் க்விட் மற்றும் ட்ரைபர் என இரு கார்களும் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் மொத்தமாக இந்நிறுவனம், 7,066 கார்களை மட்டும் விற்பனை செய்திருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் சுமார் 11,500 கார்களை விற்றுள்ளது. அக்டோபரில் மாருதி சுசுகி-யை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் ரெனோ பயணித்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பாக வெளியிட்ட ரெனோ க்விட் மற்றும் 7 இருக்கை பெற்ற ரெனோ ட்ரைபர் எம்பிவி காரும் நல்ல வரவேற்பினை சந்தையில் பெற்றுள்ளது.
ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.
ரெனோ ட்ரைபர் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.