இந்திய எஸ்யுவி சந்தையை புரட்டி போட வரவுள்ள க்ரெட்டா எஸ்யுவி அறிமுகத்திற்க்கு முன்னரே 10,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று உள்ளதால் அதித எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விற்பனையில் உள்ள டஸ்ட்டர் , டெரோனோ , ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் மாருதி எஸ் கிராஸ் போன்ற கார்களுக்கு மிக கடும் சவாலினை க்ரெட்டா தரவுள்ளது.
ஏபிஎஸ் , இபிடி , என்ஜின் இம்மொபைல்சர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பேஸ் , S ,S+ , SX+ மற்றும் SX(O)அனைத்து வேரியண்டிலும் உள்ளது.
![]() |
க்ரெட்டா 7 வண்ணங்கள் |
முன்பக்கம் இரட்டை காற்றுப்பைகள் , ரியர் பார்க்கிங் சென்சார் S+ , SX+ மற்றும் SX(O) என மூன்று வேரியண்டிலும் உள்ளது. பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள் டாப் மாடலில் மட்டுமே உள்ளது.
சில்வர் , வெள்ளை , பீஜ் , கருப்பு , சிவப்பு ,டஸ்ட் மற்றும் நீலம் என மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.
மேலும் வாசிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி விமர்சனம்
க்ரெட்டா விலை விபரம் (ex-showroom)
க்ரெட்டா 1.6 லிட்டர் பெட்ரோல்
க்ரெட்டா 1.6 Base 6MT – ரூ. 9.14 லட்சம்
க்ரெட்டா 1.6 SX 6MT – Rs. 10.11 lakhs
க்ரெட்டா 1.6 SX+ 6MT – ரூ. 11.79 lakhs
க்ரெட்டா 1.4 லிட்டர் டீசல்
க்ரெட்டா 1.4 Base 6MT – ரூ. 9.91 லட்சம்
க்ரெட்டா 1.4 S 6MT – ரூ. 11.01 லட்சம்
க்ரெட்டா 1.4 S+ 6MT – ரூ. 12.01 லட்சம்
க்ரெட்டா 1.6 லிட்டர் டீசல்
க்ரெட்டா 1.6 SX 6MT – ரூ. 12.38 லட்சம்
க்ரெட்டா 1.6 SX+ 6MT – ரூ. 13.55 லட்சம்
க்ரெட்டா 1.6 SX (O) 6MT – ரூ. 14.53 லட்சம்
க்ரெட்டா 1.6 SX+ 6AT – ரூ. 14.47 லட்சம்
MT- Manual transmission AT-Automatic Transmission O- optional
ஹூண்டாய் க்ரெட்டா பிரவுச்சர் விவரம் – பெரிதாக தெரிய படத்தின் மேல் க்ளிக் பன்னுங்க.