டோக்கியோ மோட்டார் ஷோவில் கவாஸாகி வெளியிட்டுள்ள நின்ஜா ZX-25R ஸ்போர்ட்டிவ் பைக் மற்ற மாடல்களை போல அல்லாமல் 250சிசி என்ஜினுக்கு 4 சிலிண்டர் பெற்றதாக வந்துள்ளது. பொதுவாக 250சிசி என்ஜின்கள் ஒற்றை சிலிண்டருடன் வருவதே வாடிக்கையாக உள்ள நிலையில் நின்ஜா ZX-25R மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கவாஸாகியின் நின்ஜா ZX-25R அதிகாரப்பூர்வ பவர் விபரம் வெளியாகவில்லை. சில தகவல்களின் அடிப்படையில் 59 ஹெச்பி பவருடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தோற்ற அமைப்பை பொறுத்தவரை, ZX-25R அதன் இரட்டை பிரிவை பெற்ற ஹெட்லைட்களுடன் நிஞ்ஜா 400 மாடலுக்கு இணையாகவே அமைதுள்ளது. ZX-6R மாடலின் தோற்ற உந்துதல்கள் போன்றவற்றுடன் ஸ்டைலிசான் பேனல்களை கொண்டு க்ரீன் மற்றும் பிளாக் என இரு நிறங்களை பெற உள்ளது.
முன்புறத்தில் அப் சைடு ஃபோர்க்குகளுடன், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று முன்புற டயரில் மோனோபிளாக் ரேடியல் காலிப்பர் டிஸ்க் மற்றும் பின்புற டயரிலும் டிஸ்க் பிரேக் இணைக்கபட்டுள்ளது.
நான்கு சிலிண்டர் 16 வால்வுகளை கொண்ட லிக்யூடு கூலிங் சிஸ்டத்தை பெற்றுள்ள 249சிசி என்ஜின் இன் லைன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்று வரவுள்ளது. ஆனால் இந்த என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியிடப்படவில்லை. உலகின் மிகவும் சக்திவாய்ந்த 250சிசி என்ஜினாக விளங்கும்.
பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் ஆதரவை கொண்டதாக வரவுள்ள கவாஸாகி இசட்எக்ஸ் 25ஆர் விலை ரூ.6.00 லட்சம் ஆக அமைந்திருக்கலாம். அடுத்த ஆண்டு பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியாகலாம்.