ஹோண்டா லிவோ பைக் |
ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்த வருடத்தில் 15 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது. அவற்றில் 8 புதிய மாடல்கள் மற்றும் 7 மேம்படுத்தப்பட்ட மாடல்களாகும்.
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா லிவோ பைக் சிபி டிவிஸ்ட்டருக்கு மாற்றாக விற்பனைக்கு வந்துள்ளது. லிவோ பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்ர் வசதி நிரந்தர அம்சமாக உள்ளது.l
8.25பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 8.63என்எம் ஆகும். லிவோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.
இரண்டு வேரியண்ட்களில் லிவோ கிடைக்கும். அவை 130மிமீ ட்ரம் முன் மற்றும் பின்புற பிரேக் மற்றும் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆகும்.
தற்பொழுது சந்தையில் விற்பனையில் உள்ள 110சிசி பைக்குளில் 1285மிமீ பெற்று அதிக வீல் பேஸ் கொண்ட மாடலாக விளங்குகின்றது. கருப்பு , நீலம் , பிரவுன் மற்றும் வெள்ளை என 4 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
லிவோ பைக்கில் டைமன்ட் வகை ஃபிரேம் சட்டம் பயன்படுத்தியுள்ளனர். முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஸ்பீரிங் லோடேட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா லிவோ பைக் விலை (on-road price chennai)
லிவோ ட்ரம் – ரூ.62,240
லிவோ டிஸ்க் – ரூ.64,968
Honda Livo 110cc bike launched