லம்போர்கினி கல்லார்டோ காரினை வெற்றியை தொடர்ந்து வெளியான லம்போர்கினி ஹூராகேன் ஸ்போர்ட்டிவ் கார் அமோகமான வரவேற்பினை பெற்று வெளியிடப்பட்ட 5 வருடங்களில் 14,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி எண்ணிக்கை 14,000க்கு மேற்பட்டுள்ள நிலையில் 14022 சேஸ் எண் கொண்ட மாடல் கொரியாவில் விற்பனைக்கு செல்ல உள்ளது.
முந்தைய வி10 கல்லார்டோ மாடல் இந்த சாதனையை எட்டுவதற்கு 2003-2013 வரையிலான 10 ஆண்டுகாலத்தில் பெற்ற நிலையில், 2014 ஆம் ஆண்டில் வெளியான வி10 ஹராகேன் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த சாதனையை படைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆட்டோமொபிலி லம்போர்கினி மொத்தம் 4553 கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1211 கார்கள் மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டை விட 96 % வளர்ச்சியாகும்.
சர்வதேச அளவில் லம்போர்கினி ஹூராகேன் வரிசையில் ஹூராகேன் எவோ, ஹூராகேன் எவோ ஸ்பைடர், ஹூராகேன் RWD, ஹூராகேன் RWD ஸ்பைடர், ஹூராகேன் பெர்ஃபார்மென்ட்டி, ஹூராகேன் பெர்ஃபார்மென்ட்டி ஸ்பைடர் என பல்வேறு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.