![]() |
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி |
முற்றிலும் மாறுபட்ட முகப்பு தோற்றத்தில் மிரட்டலான அமைப்பில் உள்ள ஃபார்ச்சூனர் எஸ்யுவி எல்இடி மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது. பனி விளக்குகளுக்கு பெரிய அறை , 3 ஸ்லாட்களுக்கு மத்தியில் டொயோட்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ச்சூனர் பக்கவாட்டில் புதிய ஆலாய் வீல் நேர்த்தியான வளைவுகள் கொண்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , பதிவென் பிளேட்டின் மேலே குரோம் பட்டையை கொண்டுள்ளது.
உட்புறத்தில் தொடுதிரை அமைப்பு , 4 ஸ்போக்குளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயர்ங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்களை பெற்றுள்ளது.
ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரில் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டொயோட்டா ஜிடி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்சில் கிடைக்கும். ஃபார்ச்சூனர் காரில் 7 காற்றுப்பைகள் இடம்பெற்றிருக்கும்
image source : headlightmag twitter , Top Gear Philippines
2016 Toyota Fortuner images leaked