மிகவும் பிரபலமான பொலிரோ பவர் பிளஸ் காரில் கூடுதலான சில வசதிகளை இணைத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் மாடலாக மஹிந்திரா விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாடல் டாப் ZLX வேரியண்டை விட ரூ.22,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாடல் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டதாகும்.
மஹிந்திரா பொலெரோ பவர் + சிறப்பு பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் பாடி ஸ்டிக்கரிங், சீட் கவர்கள், கார்பெட் பாய்கள், ஸ்கஃப் பிளேட் செட், ஸ்டீயரிங் வீல் கவர், முன் மூடுபனி விளக்குகள் மற்றும் ஸ்டாப் லேம்ப் கொண்ட ஒரு ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன.
சமீபத்தில், மஹிந்திரா புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க பொலிரோவை புதுப்பித்திருந்தது. எனவே, இதன் பேஸ் வேரியண்ட் முதல் ஏபிஎஸ், ஏர்பேக் போன்றவற்றை நிலையான பாதுகாப்பு வசதிகளாக ஏற்படுத்தியிருந்தது.
மஹிந்திரா பொலிரோ பவர் + மாடலில் 1493 சிசி எம்ஹாக்70 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எம்ஹாக்70 என பெயரிடப்பட்டுள்ள 1.5 லிட்டர் இன்ஜின் ஆற்றல் 71 hp மற்றும் டார்க் 190Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மஹிந்திரா பொலிரோ கார் விலை ரூ.9.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)