உலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited – SAVWIPL) என்ற பெயரில் ஒருங்கிணைத்து செயல்பட உள்ளது.
முன்பாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India Private Limited – SAIPL), வோக்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India Private Limited – VWIPL) மற்றும் வோக்ஸ்வேகன் குழும விற்பனை பிரிவு (Volkswagen Group Sales India Private Limited – NSC) என மொத்தம் மூன்று நிறுவனங்களாக செயல்பட்டு வந்த வோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி, லம்போர்கினி மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்கள் தற்பொழுது ஒரு குடையின் கீழ் திரு. குர்பிரதாப் போபராய் நிர்வாக இயக்குநராக கொண்டு இந்தியா 2.0 புராஜெக்ட் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த இணைப்பு குறித்து பேசிய போபராய், “இந்த இணைப்பின் மூலம், இந்தியாவில் உள்ள எங்கள் அணியின் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிபுணுத்துவத்தை ஒன்றிணைக்கவும், சவாலான, போட்டியாளர்களை எதிர்கொள்ளவும் எங்கள் உண்மையான திறனை உணரவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எங்கள் விற்பனை மேலும் வலுப்படுத்தவும், எங்கள் ஊழியர்களின் தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும். எங்கள் விற்பனையாளர்களுக்கு நிலையான இலாபத்தை பாதுகாக்கவும் நாங்கள் விரும்புகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.
MQB-A0-IN பிளாட்ஃபாரத்தின் அடிப்படையாக கொண்டு புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவி கார் ஒன்றை வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா இணைந்து தயாரிக்க உள்ள முதல் மாடலாகும். இந்தியா 2.0 புராஜெக்ட்டின் அடிப்படையில், இந்த எஸ்யூவி காரை 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக கான்செப்ட்டை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.