இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள 2020 யமஹா MT-03 பைக்கின் தோற்ற அமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து 42 ஹெச்பி பவரை வழங்கும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற மாடலை விட முற்றிலும் மாறுபட்ட மாடலாக முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு செல்ல உள்ள இந்த மாடல் ஆர்3 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடலாகும். இந்த பைக்கின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 42 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 29.6 என்எம் ஆகும்.
முன்புறத்தில் KYB யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சாருபருடன், முன்புற டயரில் 298 மிமீ டிஸ்க் பிரேக், பின்புற டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டுள்ளது. டிஜிட்டல் முறையிலான எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது மேம்பட்ட யமஹா MT-09 மற்றும் யமஹா MT-15 பைக்குகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள எம்டி-03 மாடலும் தோற்ற ஸ்டைலிங் அம்சங்களை இந்த மாடல்களில் இருந்து பெற்று முந்தைய சிங்கிள் ஹெட்லைட் யூனிட்டிற்கு பதிலாக இரு பைலட் லேம்புடன் பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ளது. கூர்மையான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துவதுடன் இரு பிரிவு இருக்கைகளை கொண்டுள்ளது.
இந்தியாவில் ரூ.3.51 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்ற இந்த மாடல் புதிய மேம்பட்ட 2020 யமஹா MT-03 விலை கணிசமாக உயர்த்தப்பட்ட அடுத்த ஆண்டில் வெளியாகலாம்.