குறைந்த விலை ஹேட்ச்பேக் ரக மாடலான ரெனோ க்விட் ரூபாய் 2.83 லட்சம் முதல் அதிகபட்சமாக ரெனோ க்விட் கிளைம்பர் ரூ.4.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,000 மட்டும் பேஸ் வேரியண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
க்விட் காரின் இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைபரில் இடம்பெற்றுள்ள 8.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக நேர்த்தியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ளோவ் பாக்ஸ் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஏசி வென்ட், கன்சோல் பட்டன்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் ரோட்டரி லிவர் இரு இருக்கைகளுக்கு மத்தியில் மாற்றப்பட்டுள்ள. மேனுவல் கியர்பாக்சில் வழக்கம் போல அமைந்துள்ளது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெனோ K-ZE அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடலில் மிக ஸ்டைலிஷான ஹெட்லைட் யூனிட், முன்புற பம்பர் மற்றும் கிரில் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றும் இல்லை. புதிய கிரே ஃபினிஷ் பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது. காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகள் மற்றும் ரிஃபெளெக்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெறுகின்ற ஆரஞ்சு நிற பாடி கிளாடிங், ஓஆர்விஎம் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது.
0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். ஏப்ரல் 2020 க்கு முன்பாக பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.
புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ, டட்சன் ரெடிகோ, ஆல்ட்டோ கே10 உள்ளிட்ட மாடல்களுடன் சந்தையை ரெனோ க்விட் கார் ரூ. 2.83 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Standard, RxE, RxL, RxT (O) மற்றும் கிளைம்பர் என மொத்தமாக 8 வகைகளில் கிடைக்கின்ற க்விட் காருக்கு முன்பதிவு இநிறுவனத்தின் டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் ரூ.5000 செலுத்தி மேற்கொள்ளலாம்.
க்விட் மாடலின் முக்கிய போட்டியாளரான மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, ரூ .3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரை கிடைக்கின்றது.. மாற்றாக, டட்சன் ரெடிகோ (ரூ. 2.80-4.37 லட்சம்) மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ கே10 (ரூ. 3.61-4.40 லட்சம்) ஆகியவற்றிலிருந்து எதிர்கொள்ளுகின்றது.
Kwid facelift STD 0.8L MT: ரூ. 2.83 லட்சம்
Kwid facelift RXE 0.8L MT: ரூ. 3.53 லட்சம்
Kwid facelift RXL 0.8L MT: ரூ. 3.83 லட்சம்
Kwid facelift RXT 0.8L MT: ரூ. 4.13 லட்சம்
Kwid facelift RXT 1.0L MT: ரூ. 4.33 லட்சம்
Kwid Climber facelift RXT 1.0L MT: ரூ. 4.54 லட்சம்
Kwid facelift 1.0L AMT: Rs 4.63 lakhs
Kwid Climber facelift 1.0L AMT: ரூ. 4.84 லட்சம்
வழங்கப்பட்டுள்ள அனைத்து விலை விபரங்களும் எக்ஸ்ஷோரூம் டெல்லி ஆகும்.. தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் ரெனோ க்விட் ரூ.2.93 லட்சத்திலும், கேரளாவில் ரூ. 2.96 லட்சத்திலும் தொடங்குகின்றது.