பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலான ஜாஸ் மிக சிறப்பான இடவசதி அதிகப்படியான மைலேஜ் , சிவிடி கியர்பாக்ஸ் , மேஜிக் இருக்கை மேலும் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.
ஜாஸ் மேஜிக் இருக்கை |
பின்புறத்தில் மிக நேர்த்தியான ஸ்டைலிஸ் எல்இடி டெயில் லைட் , பதிவென் பிளேட்டின் மேல் குரோம் பட்டையை கொண்டுள்ளது
இன்டிரியர்
உட்புறத்தில் பிரிமியம் பிஜ் மற்றும் ஸ்போர்ட்டிவ் கருப்பு என இரண்டு வண்ணத்தில் இருக்கும். டேஸ்போர்டில் 6.2 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , மேஜிக் இருக்கை போன்ற வசதிகள் உள்ளன.
என்ஜின்
ஜாஸ் காரில் 90பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 100என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
ஜாஸ் டீசல் காரில் 100பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.
ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.7கிமீ ஆகும். டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.3கிமீ ஆகும்.
சிறப்பம்சங்கள்
ஜாஸ் காரில் 5 இஞ்ச் ஆடியோ கட்டுப்பாடு அமைப்பு உள்ளது.பூளூடூத் தொடர்பு வசதிகள் உள்ளன. டாப் வேரியண்டில் ஏவிஎன் அதாவது ஆடியோ வீடியோ நேவிகேஷன் 6.2 இஞ்ச் தொடுதிரை அமைப்பு உள்ளது.
டாப் வேரியண்டில் ஸ்போர்ட்டிவ் கருப்பு நிற இண்டிரியர் , இரட்டை காற்றுப்பைகள் , பல தகவல் வழங்கும் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு , ஈக்கோ டிஸ்பிளே போன்றவை உள்ளன.
ஏஸ் பாடி அமைப்பு , ஏபிஎஸ், இபிடி , காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஜாஸ் காரில் உள்ளது.
ஹோண்டா ஜாஸ் கார் விலை விபரம் (EX-showroom Delhi)
பெட்ரோல்
ஜாஸ் E – ரூ. 5.30,900
ஜாஸ் S – ரூ. 5,94,000
ஜாஸ் SV – ரூ.6,44,900
ஜாஸ் V – ரூ.6,79,900
ஜாஸ் VX – ரூ.7,29,000
ஜாஸ் S – ரூ. 6,99,000 (சிவிடி)
ஜாஸ் V – ரூ. 7,85,000 (சிவிடி)
டீசல்
ஜாஸ் E – ரூ.6.49,000
ஜாஸ் S – ரூ.7,14,000
ஜாஸ் SV – ரூ.7,64,900
ஜாஸ் V – ரூ.8,09,900
ஜாஸ் VX – ரூ. 8,59,000
Honda Jazz launched in India starting price at RS. 5.30 lakhs