சரிந்து வரும் விற்பனை ஈடுகட்டும் நோக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 க்ரூஸர் ரக பைக்கினை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக குறைந்த விலை என்ஃபீல்டு புல்லட் 350, புல்லட் 350ES பைக்குகள் 6 நிறத்தில் விற்பனைக்கு வெளியானது. அதனை தொடர்ந்து இரு நிறங்களில் கிளாசிக் 350 எஸ் மாடல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரியர் டிரம் பிரேக்குடன் வந்துள்ளது.
இந்நிலையில், விற்பனையில் உள்ள தண்ட்ர்பேர்டு 350 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாடலை விட ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை விலை குறைவான சிங்கிள் சேனல் ஆன்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு , பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்ஷன் பெற்ற மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகியுள்ளது. கூடுதலாக புதிய நிறங்களை பெற வாய்ப்புள்ளது. மற்றபடி கருப்பு நிறத்தில் என்ஜின், வீல், கிராபிக்ஸ் ஸ்டைல் பெற்ற லோகோ மற்றும் பேட்ஜ், ஆனது பெற்றிருக்கலாம்.
தண்டர்பேர்டு 350 பைக்கில் 346சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 19.8hp பவரையும், 28Nm டார்கையும் வழங்கும் ஏர் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைத்து வரும் ராயல் என்ஃபீல்டு தண்ட்ர்பேர்டு 350 விலை ரூ.1,56,658 (எக்ஸ்-ஷோரூம் சென்னை).