ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் ஆரஞ்சு |
எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 150சிசி என்ஜின் பொருத்தியுள்ளனர்.
15.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 149.2சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் முறுக்குவிசை 13.5என்எம் ஆகும். மிக நேர்த்தியான பாடி கிராஃபிக்ஸ் ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்குகின்றது
புதிய முகப்பு விளக்குகள் , டவீன் எல்இடி பைலட் விளக்கு மற்றும் விங்கர்ஸ் உள்ளன. 5 விதமான வண்ணங்களில் எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் கிடைக்கும். அவை கருப்பு , சிகப்பு , சில்வர் , கருப்பு நிறத்துடன் கூடிய சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகும்.
அகலமான பின்புற டயர் , பக்கவாட்டு ஸ்டேண்டு இண்டிகேட்டர் , டீயூப்லெஸ் டயர் போன்ற அம்சங்கள் ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உள்ளது.
ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் விலை
ரூ. 72,725 (ex-showroom Delhi)
ரூ. 73,194 (ex-showroom Mumbai)
ரூ. 71,515 (ex-showroom Chennai)
ரூ. 73902 (ex-showroom Kolkata )
ரூ. 71,729 (ex-showroom Bengaluru )
Hero MotoCorp launches new Xtreme Sports Premium Motorcycle