அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவிருக்கும் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் தரம் சார்ந்த அம்சங்களுடன் கூடுதலாக சில நவீன டெக் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 400 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருந்தாலும், என்டார்க் 125 மற்றும் புதிய ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை இந்த மாடலும் பெற உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக வரவுள்ளது. மேலும், கியர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டு ஹைவே பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
அப்பாச்சி 200 பைக்கில் ரைடிரின் ஓட்டுதல் பழக்கத்திற்கு ஏற்ப லீன் ஏங்கிள்ஸ் மற்றும் ஜி ஃபோர்ஸ் போன்றவற்றை Inertial Measurement Unit (IMU) அச்சின் மூலம் கனக்கிட்டு சென்சார் வாயிலாக கட்டுப்படுத்துகின்றது. டூர் மோடினை பெற வாய்ப்புகள் உள்ளது.
மேலும், புதிய எல்இடி ஹைட்லைட் உடன் பல்வேறு மேம்பாடுகளுடன் 2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் அறிமுகம் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.