ஜாஸ் E வேரியண்ட்
ஹோண்டா ஜாஸ் பேஸ் வேரியண்டாக நிலை நிறுத்தப்பட உள்ளது. E வேரியண்டில் டில்ட் ஸ்டீயரிங் , மல்டி இன்ஃபர்மெஷன் டிஸ்பிளே , பவர் விண்டோஸ் , டேக்கோமீட்டர் , டிரைவர் இருக்கை பட்டை எச்சரிக்கும் கருவி என அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.
ஜாஸ் S வேரியண்ட்
ஜாஸ் E வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக் உடன் கூடிய இபிடி , பாடி வண்ணத்தில் ஹேன்டில் மற்றும் விங் மிரர் , ஆடியோ சிஸ்டம் 8.9 செ.மீ திரை , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் , சென்ட்ரல் லாக்கிங் , ஓட்டுநர் இருக்கை உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி , ரியர் பார்சல் டிரே போன்ற அம்சங்கள் உள்ளது.
ஜாஸ் SV வேரியண்ட்
ஜாஸ் S வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , பனி விளக்குகள் , நவீன தகவல் திரை , நிகழ்நேர எரிபொருள் அளவு , பிரிமியம் ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டிரியரை கொண்டுள்ளது.
ஜாஸ் V வேரியண்ட்
ஜாஸ் SV வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ரியர் வைப்பர் மற்றும் வாஸர், ஆலாய் வீல் , தானியங்கி ஏசி , தொடுதிரை அமைப்பு , பேடல் ஸ்ஃபஃடருடன் கூடிய சிவிடி போன்றவற்றை பெற்றுள்ளது.
ஜாஸ் VX வேரியண்ட்
ஜாஸ் V வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 6.1 இஞ்ச் தொடுதிரை ஆடியோ வீடியோ நேவிகேஷன் அமைப்பு , கருப்பு நிற இருக்கை , ரியர் ஸ்பாய்லர் , மக்கார்டு போன்றவை பெற்றுள்ளது. மேலும் ஹோண்டா ஜாஸ் மேஜிக் சீட் உள்ளது. மேஜிக் இருக்கையை படத்தில் காணலாம்.
New Honda Jazz variants leaked
source : teambhp