இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஆட்டோ எக்ஸ்போ உதிரி பாகங்கள் 2020 கண்காட்சி பிப்ரவரி 6 முதல் 9 ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டனில் நடைபெற உள்ளது.
14வது வருடமாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு புதிய மாடல்கள் உட்பட கான்செப்ட் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது. மேலும் ஒரு சில வாகன தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கடந்த ஷோவில் சுமார் 67 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் 20 நாடுகளைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றது.
15வது முறையாக நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் அணிவகுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களான மாருதி வேகன் ஆர் EV, மஹிந்திரா eKUV100, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 EV, ரெனால்ட் க்விட் EV, மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் EV போன்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
மேலும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய கான்செப்ட்கள் இடம்பெறலாம்.
15வது ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ள நிறுவனங்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் தொடர்ந்து கடந்த ஆட்டோ எக்ஸ்போ 2018 அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.