புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே காரில் புதிய எல்இடி முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் எல்இடி கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கேபின் தரம் மற்றும் இருக்கை சொகுசு அம்சங்களை மேம்படுத்தியுள்ளனர்.
இன்டச் கார் புரோ இன்ஃபோடெயின்மென்ட் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் எக்ஸ்ஜே ஆட்டோபயோகிராஃபி புதிய டாப் வேரியண்டாக சேர்க்கப்பட்டுள்ளது. லாங் வீல் பேசில் மட்டும் கிடைக்கும். இந்த XJ ஆட்டோபயோகிராஃபியில் 20 இஞ்ச் ஆலாய் வீல் , லெதர் இருக்கை , பின் இருக்கைகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் XJ R-ஸ்போர்ட் வேரியண்டில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் தோற்றம் , ஸ்பாய்லர் , ஸ்போர்ட் இருக்கைகளை கொண்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ மேம்படுத்தப்பட்ட ஜாகுவார் XJ சொகுசு கார் விற்பனைக்கு வரலாம்.