மாருதி சுசூகி , ஹூண்டாய் , ஹோண்டா , டாடா , ஃபோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மஹிந்திரா , டொயோட்டா ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் சரிவினை சந்தித்துள்ளது.
1. மாருதி சுசூகி
நாட்டின் முதன்மையான நிறுவனமான மாருதி சுசூகி தொடர்ந்து தன் சந்தையில் விற்பனையை அதிகரித்து வருகின்றது. கடந்த மே மாதத்தில் 13.03 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 1,02,359 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 90,560 கார்களை விற்பனை செய்தது.
2. ஹூண்டாய்
நாட்டின் இரண்டாவது நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த மே மாதத்தில் 3.4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 37, 450 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 36,265 கார்களை விற்பனை செய்தது.
3. மஹிந்திரா & மஹிந்திரா
நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா கடந்த மே மாதத்தில் 6.86 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 18,135 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 19,470 கார்களை விற்பனை செய்தது.
4. ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதத்தில் 0.52 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 13,431 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 13,362 கார்களை விற்பனை செய்தது.
5. டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் கடந்த மே மாதத்தில் 2.70 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 11,511 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 11, 831 கார்களை விற்பனை செய்தது.
6. டாடா
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 20.67 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 11,138 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 9,230 கார்களை விற்பனை செய்தது.
7. ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனம் கடந்த மே மாதத்தில் 21.92 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 4,726 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 6,053 கார்களை விற்பனை செய்தது.
8. ஃபோக்ஸ்வாகன்
ஃபோக்ஸ்வாகன் இந்தியா கடந்த மே மாதத்தில் 56.83 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 4,167 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 2,657 கார்களை விற்பனை செய்தது.
Four wheeler sales Report May 2015