யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் மாடலை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. யமஹா ஃபேசினா ஸ்கூட்டர் விலை ரூ.52,500 ஆகும்.
இந்தியாவில் 4வது ஸ்கூட்டரை யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. விற்பனையில் உள்ள ரே , ரே இசட் மற்றும் ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்ட அதே 113சிசி பூளு கோர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
7.5பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்குவிசை 8.1என்எம் ஆகும். யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 66கிமீ ஆகும்.
பழமையான தோற்றத்தினை கொண்டுள்ள முகப்பு விளக்குகள் மற்றும் குரோம் பூச்சூகளை கொண்டுள்ளது. நேர்த்தியான வடிவத்தில் விளங்குகின்றது.
ஃபேசினோ ஸ்கூட்டரில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பியாஜியோ வெஸ்பா ஸ்கூட்டருக்கு நேரடியான சவாலினை ஃபேசினோ ஸ்கூட்டர் தரும்.
ஃபேசினோ ஸ்கூட்டர் விலை ரூ.52500 (ex-showroom, Delhi)