உலகின் மிக சிறந்த தலைவர்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்று ஆட்டோமொபைல் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உள்ளார். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
13வது இடத்தில் உலகின் முதல் பெண் ஆட்டோமொபைல் தலைமை செயல் அதிகாரியான ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேரி பார்ரா உள்ளார்.
23வது இடத்தில் தெஸ்லா மோட்டார்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சிஇஒ இலான் மஸ்க் உள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் நேரடியாக இல்லை என்றாலும் 44வது இடத்தில் யூபர் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவில் கிளானிக் இடம்பெற்றுள்ளார்.
source:fortune