முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் காரான டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காருக்கான முதல் பேஸ் தயாரிப்பில் உள்ள 500 கார்களுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளதாம். டிசி அவந்தி கார் மொத்தம் 4000 கார்கள் மட்டுமே டிசி தயாரிக்கும் என்பது குறிப்பிடதக்கதாகும்.
ரெனோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 250பிஎச்பி மற்றும் டார்க் 340என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட 6 விநாடிகள் எடுத்தக்கொள்ளும். 1580 கிலோ கிராஸ் எடை கொண்ட அவந்தி காரில் இருவர் அமர்ந்து செல்லமுடியும். ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் காற்றுப்பைகள் இல்லை.
வரும் 15ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள டிசி அவந்தி விலை ரூ.35 லட்சத்திற்க்குள் இருக்கும்.