புதிய ஜாகுவார் XF சொகுசு செடான் காரின் இரண்டாம் தலைமுறை டீசர் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வரும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
முகப்பு தோற்றத்தில் சில நேர்த்தியான மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிகின்றது. மேலும் உட்புறத்தில் புதிய இன்டிரியரை கொண்டிருக்கின்றது.
வரும் மார்ச் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஜாகுவார் XF கார் வரும் ஏப்ரல் 1ந் தேதி தொடங்க உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோ கண்காட்சியில் உலகின் பார்வைக்கு வரவுள்ளது.
உட்ப்புறத்தில் மிக அழகான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் பேனல் மற்றும் மிக பெரிய எல்சிடி தொடுதிரை அமைப்பினை பெற்றுள்ளது. மேலும் முக்கிய அம்சமாக இலகுவான எடை கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால் 100கிலோ வரை எடை குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
புதிய ஜாகுவார் எக்ஸ்ஃஎப் பற்றி இயன் கெல்லம் கூறுகையில்
மிக நேர்த்தியான, அழகான வடிவத்திலும் பாரம்பரியமான தோற்றத்திலும் புதிய ஜாகுவார் XF கார் விளங்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ளார்.