போர்ஷே கேமென் ஜிடிஎஸ் மற்றும் பாக்ஸடர் ஜிடிஎஸ் இரண்டிலும் 3.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கார்களுமே மிக சிறப்பான ஸ்போர்டிவ் மாடல் கார்களாகும்.
போர்ஷே பாக்ஸடர் ஜிடிஎஸ் காரில் 326பிஎச்பி ஆற்றலை தரும் வகையில் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
போர்ஷே கேமென் ஜிடிஎஸ் காரில் 335பிஎச்பி ஆற்றலை தரும் வகையில் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டிலும் 7 வேக பிடிகே தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டிலும் ஸ்போர்ட் குரோன பேக்கேஜ் உள்ளது.
பாக்ஸடர் ஜிடிஎஸ் காரின் ஸ்போர்ட்ஸ் மோடில் 0 முதல் 100கிமீ வேகத்தினை தொடுவதற்க்கு 4.7 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் கேமென் ஜிடிஎஸ் 4.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். கேமென் ஜிடிஎஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 283கிமீ மற்றும் பாக்ஸடர் ஜிடிஎஸ் உச்சகட்ட வேகம் மணிக்கு 279கிமீ ஆகும்.
போர்ஷே பாக்ஸடர் ஜிடிஎஸ் விலை ரூ.1.15 கோடி
போர்ஷே கேமென் ஜிடிஎஸ் விலை ரூ.1.17 கோடி
(Ex-showroom Delhi)