இரண்டு டைகர் வரிசை பைக்குகளிலும் 94பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3 சிலிண்டர் கொண்ட 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 79என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஏபிஎஸ் பிரேக் , டிராக்சன் கன்ட்ரோல் அமைப்பு , க்ரூஸ் கன்ட்ரோல் , மூன்று விதமான ஓட்டுதல் வகை , நான்கு விதமான திராட்டில் மேப்ஸ்களை கொண்டுள்ளது. அவை ரெயின் , ரோடு, ஸ்போர்ட் மற்றும் ஆஃப் ரோடு. அலுமினிய சம்ப் கார்டு, என்ஜின் பாதுகாப்பு கம்பிகள் , ஹேன்ட் கார்டு போன்றவைகள் நிரந்தர அம்சமாக இருக்கும்.
ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் பைக்கில் முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் மோனோசாக் அப்சர்பர் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொழுது மட்டுமே ஏபிஎஸ் பிரேக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சிஎக்ஸ் பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் இல்லை. மேலும் எக்ஸ்ஆர்எக்ஸ் பைக்கை விட இருக்கை சற்று தாழ்வாக உள்ளது.
ட்ரையம்ஃப் டைகர் பைக் விலை
டைகர் எக்ஸ்ஆர் – ரூ.10.5 லட்சம்
டைகர் எக்ஸ்ஆர்எக்ஸ் — ரூ.11.6 லட்சம்
டைகர் எக்ஸ்சிஎக்ஸ் — ரூ.12.7 லட்சம்