விபத்துகளை தவிர்க்கும் முயற்சியில் டயர் தயாரிப்பில் ரப்பருடன் சிலிக்கான் பயன்படுத்தவும் மற்றும் நைட்ரஜன் ஏர் நிரப்புவதனை கட்டயாம் மேற்கொள்வதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்வில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் டயர் உற்பத்திக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த டயர் தரத்தை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களைத் தடுக்கவும் இயலும்.
பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியில், “டயர் உற்பத்தியாளர்கள் டயர்களில் ரப்பருடன் சிலிக்கான் கலந்து சாதாரண காற்றிற்கு பதிலாக நைட்ரஜனை ஏர் நிரப்புவது கட்டாயமாக்குவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
டயர் தயாரிக்கும் போது சிலிக்கான சேர்ப்பதுடன் மற்றும் சாதாரன காற்றினை பயன்படுத்துவதனை தவிர்த்து, நைட்ரஜன் காற்று நிரப்புவதனால், அழுத்தத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது. அதிக வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும் வாய்ப்புகளை இது குறைக்கும் மற்றும் சாலை விபத்துகளைத் தடுக்கும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவில் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில பல்வேறு பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பைக்குகளில் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயம், கார்களில் ஏர்பேக், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார் மற்றும் இருக்கை பட்டை அணிவது நினைவூட்டல் போன்றவை செயற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 2019 முதல் இந்தியாவில் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. தொடர்ந்து பல்வேறு மோட்டார் வாகன பாதுகாப்பினை அரசு மேற்கொள்ள உள்ளது.