டுகாட்டி இந்தியாவில் வெளியிட்டுள்ள ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலான டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரா பைக் விலை ரூ.19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும். முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த டுகாட்டி மல்டிஸ்டிராடா 1200 என்டியூரா மாடலை விட 1.96 லட்சம் விலை கூடுதலாக அமைந்துள்ளது.
1260 என்பது என்டியூரா குடும்பத்தின் புதிய வரவாகும். முன்பாக உள்ள அதே 1,262 சிசி ட்வீன் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 9,500 ஆர்.பி.எம் சுழற்சியில் 158.3 ஹெச்பி பவர் மற்றும் 7,500 ஆர்.பி.எம் சுழற்சியில் 128 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. அப்-டவுன் முறையிலான டுகாட்டி க்விக் ஷிஃப்டருடன் கூடிய 6-வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் குறிப்பாக 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ, கார்னரிங் ஏபிஎஸ், நான்கு விதமான டிரைவிங் முறைகள் (அர்பன், ஸ்போர்ட், டூரிங் மற்றும் எண்டிரோ), டுகாட்டி வீல் கட்டுப்பாடு, டுகாட்டி டிராக்ஷன் கட்டுப்பாடு, வாகன ஹோல்ட் கட்டுப்பாடு (ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்) ஆகியவற்றுடன் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்சன் வழங்கப்படுள்ளது. 5.0-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இணைப்புடன் ரைடிங் தொடர்பான பல்வேனு புள்ளி விவரங்களை கண்காணிக்கவும் பைக்கின் அமைப்பை மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது.
இந்தியாவில் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 என்டியூரோ பைக் ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ட்ரையம்ஃப் டைகர் 1200 Xcx மற்றும் பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் பைக் மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.