புதிய கேப்டிவா காரில் எவ்விதமான வெளிதோற்றம் மாற்றமில்லை. உட்ப்பறத்தில் கிளஸ்டர் ஐனைஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபின் மிகவும் சுத்தமாக எவ்விதமான வாடையும் இல்லாமல் இருக்கும். புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.
7 இருக்கைகள் கொண்ட கேப்டிவா காரில் முந்தைய என்ஜினில் மாற்றம் இல்லை. 187ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ்களில் கிடைக்கும்.
6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுநர் இருக்கையை தேவைக்கேற்ப் அமைத்து கொள்ளும் வசதி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
செவர்லே கேப்டிவா விலை (ex-showroom, Delhi)
செவர்லே கேப்டிவா ரூ. 25.13 லட்சம் (4×2 மெனுவல்)
செவர்லே கேப்டிவா ரூ. 27.36 லட்சம் (4×4 ஆட்டோ)