மிரட்டலான தோற்றத்தில் விளங்கும் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவி படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.
கம்பிரமான தோற்றத்தினை தொடர்ந்து புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் மெருகேற்றியுள்ளனர். மேலும் முகப்பு தோற்றத்தில் அழகினை கூட்டியுள்ளனர்.
புதுவிதமான தோற்றத்தில் முகப்பு விளக்குகள், செங்குத்தான பகல் நேர எல்இடி விளக்குகள் , முகப்பு கிரில் மற்றும் பனி விளக்குகள் போன்ற பகுதிகளில் குரோம் பூச்சூ பூசப்பட்டுள்ளது.
முகப்பு தோற்றம் லேண்ட் குரூஸர் மற்றும் லெக்சஸ் கார்களின் அடிப்படையில் முகப்பினை டொயோட்டா வடிவமைத்துள்ளது. புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் விற்பனையில் உள்ள மாடலை விட அதிகப்படியான இடவசதியை கொண்டிருக்கும்.
credit: headlight mag
டொயோட்டா இன்னோட்டிவ் இன்ட்ர்நேஷனல் மல்டி பர்ப்போஸ் வைக்கிள் (Toyota’s Innovative International Multi-purpose Vehicle (IMV)) தளத்தில்தான் புதிய தலைமுறை ஃபார்ச்சூனரும் உருவாகியுள்ளது. இதே தளத்தில் உருவாக்கப்பட்டவைதான் இன்னோவா மற்றும் ஹைலிக்ஸ் பிக்அப் ஆகும். விற்பனையில் உள்ள மாடலை போலவே புதிய காரும் லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஃபார்ச்சூனர் இன்னோவா காருக்கு இணையான சொகுசு தன்மையை தரவல்லதாக உட்கட்டமைப்பினை மேம்படுத்த உள்ளதாக தெரிகின்றது. மேலும் கேம்ரி காரில் உள்ளது போல் டேஸ்போர்டு அமைப்பு இருக்கும்.
புதிய டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் உருவாக்கி வருகின்றனராம். ஆனால் இந்தியாவில் டீசல் என்ஜினில் மட்டும் விற்பனைக்கு வரவுள்ளது. முந்தைய மாடலை விட சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தினை தரும்.
வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்.
source : flywheel