தமிழகத்தில் உள்ள செய்யாறு பகுதியில் ரூ.4000 கோடி முதலீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் புதிய வாகன சோதனை ஓட்ட களம் மற்றும் புதிய எஸ்யூவி கார்களுக்கான தயாரிப்பு ஆலையை கட்டமைக்க உள்ளது.
சென்னை அருகிலுள்ள செய்யாற்றில் ரூ. 4000 கோடி முதலீட்டில் 7 வருடங்களுக்குள் இந்த புதிய தொழிற்சாலையை மஹிந்திரா நிறுவனம் அமைக்க உள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களுக்கான சோதனை ஓட்ட களத்தினை நிர்மானிக்கவுள்ளது.
வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சுமார் 255 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையை மஹிந்திரா உற்பத்திக்கு கொண்டு வரும்பொழுது மஹிந்திராவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக விளங்கும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா ஆட்டோமேட்டிவ் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.
ஆதாரம்; economic times