வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள கடைசி LA finale புகாட்டி வேரான பல சிறப்புகளை கொண்ட உலகின் மிக சிறந்த காராகும். 450 கார்கள் என்ற இலக்கினை வைத்து விற்பனை செய்யப்பட்ட வேரான் கடந்த 10 ஆண்டுகளாக உலக சந்தையில் இருந்து வந்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் சந்தையில் நுழைந்த வேரான் 987பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 8.0 லிட்டர் W16 சிலிண்டர் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
இதே என்ஜின் 2008 ஆம் ஆண்டில் 1184பிஎச்பி ஆற்றலாக உயர்த்தப்பட்டு கிராண்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது.
2010யில் சூப்பர் ஸ்போர்ட் , 2012யில் கிராண்ட் ஸ்போர்ட் விட்டாஸ் எனவும் பிளாக் ப்யூட்டி எனவும் பல சிறப்பு பதிப்புகளை புகாட்டி வேரான் கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ளது.
புகாட்டி வேரான் உச்சகட்ட வேகம் மணிக்கு 431கிமீ ஆகும். இதனால் உலகின் மிக வேகமான கார் என்ற பெயரினை கொண்டிருந்தது. கடந்த 2014 ஹேன்னிஸி வேனோம் ஜிடி கார் மணிக்கு 435கிமீ வேகத்தினை பதிவு செய்தது.
அடுத்த வருடத்தில் புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக புதிய சூப்பர் கார் வேரான் 8.0 லிட்டர் என்ஜினுடன் 1497பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய காராக விற்பனைக்கு வரவுள்ளது.
படிக்க, உலகின் மிக வேகமான கார் ஹேன்னிஸி வேனோம்
காகித புகாட்டி வேரான்