புதிய தலைமுறை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலில் இடம்பெற உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் விவரம் முதன்முறையாக கசிந்துள்ளது. புதிய பைக்கில் செமி டிஜிட்டல் அனலாக் முறையில் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ள முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை என்ஃபீல்டு கிளாசிக் பைக்கில் பிஎஸ் 6 என்ஜின் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம். இந்நிலையில் புதிதாக வெளிவந்த சோதனை ஓட்ட படங்களில் பல விபரங்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் வெளியாகியுள்ள புதிய சோதனை ஓட்ட படங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சில்வர் நிற யூனிட்டை கொண்டு ஆரஞ்சு நிறத்திலான வேக அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. வேக அடையாளங்கள் மஞ்சள் நிற அவுட்லைன் பெற்றுள்ளது. கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் அம்சத்தில் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் நிலை போன்றவை வழங்கப்பட உள்ளது.
வலது புறத்தில் சுவிட்ச் கியர் ஹெட்லேம்பை மங்கலாக்குவதற்கும் / பிரகாசப்படுத்துவதற்கும் மற்றும் ஹெட்லேம்ப் பாஸ் செயல்பாடிற்கு என ரோட்டரி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுப்பிக்கப்பட்ட முறையில் ஹார்ன் மற்றும் இன்டிகேட்டர் சுவிட்ச் வழங்கப்படிருக்கின்றது.
இடது புறத்தில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிறத்திலான ரோலிங் முறையில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச்கியர் நிலையான என்ஜின் கில் சுவிட்சு இடம் பெற்றுள்ளது.
image source – GaadiWaadi