மாருதி சுசுகி பலேனோ அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள டொயோட்டா கிளான்ஸா கார், பலேனோவை விட 64,812 ரூபாய் குறைவாக வெளியிட்டுள்ளது. டொயோட்டா-சுஸுகி இரு நிறுவனங்களுக்கிடைய ஏற்பட்டுள்ள ஒபந்தத்தின் படி பலேனோ காரின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முதல் டொயோட்டா காராக கிளான்ஸா வெளியிடப்பட்டுள்ளது.
பலேனோ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில், கிளான்ஸா காரில் பெட்ரோல் மட்டும் பெற்றுள்ளது. மாருதியின் பலேனோ காரில் டீசல் என்ஜின் ஏப்ரல் 2020 முதல் கைவிடப்பட உள்ளது.
கிளான்ஸா காரின் விலை பட்டியல்
ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்கள் பொதுவாக பல்வேறு மாற்றங்களை பெறும், ஆனால் டொயோட்டா நிறுவனம், லோகோ மற்றும் முன்புற கிரில், பெயர் போன்றவற்றை தவிர எந்த மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இரு நிறுவன கார்களின் வேரியன்ட் வாரியான வசதிகள் கூட ஒரே மாதியாக அமைந்திருக்கின்றது.
ஆனால் டூயல் ஜெட் மைல்டு ஹைபிரிட் 1.2 லிட்டர் என்ஜின் ஆப்ஷனை பெற்ற மாடல் பலேனோ காரில் உள்ள Zeta SHVS பெட்ரோல் மாடலுக்கு இணையான அம்சத்தை பெற்ற G MT SHVS மாடல் 64812 ரூபாய் குறைவாக அமைந்துள்ளது. பொதுவாக இரு வேரியண்டுகளின் வசதிகளில் எந்த குறைவும் இல்லை.
அடுத்தப்படியாக மற்ற வேரியண்டுகளும் பலேனோவை விட கிளான்சா பெரிதாக விலையை அதிகரிக்கமால் வெறும் ரூபாய் 12 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருமாடல்களுக்கு இடையிலான விலை விபரம் கீழே உள்ள அட்டவனையில் வழங்கப்பட்டுள்ளது.
இங்கே வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
மாருதி பலேனோ | விலை | டொயோட்டா கிளான்ஸா | விலை |
---|---|---|---|
Sigma Petrol | ₹ 5,67,602 | – | – |
Delta Petrol | ₹ 6,48,612 | – | |
Zeta Petrol | ₹ 7,05,112 | ||
Delta Petrol SHVS | ₹ 7,37,412 | ||
Alpha Petrol | ₹ 7,68,212 | V MT Petrol | ₹ 7,68,100 |
Delta Petrol AT | ₹ 7,80,612 | ||
Zeta Petrol SHVS | ₹ 7,93,912 | G MT Petrol SHVS | ₹ 7,29,100 |
Zeta Petrol AT | ₹ 8,37,112 | G AT Petrol | ₹ 8,37,100 |
Alpha Petrol AT | ₹ 9,00,112 | V AT Petrol | ₹ 9,00,100 |
(Toyota Glanza ex-showroom Tamil Nadu)
கிளான்சாவின் மைலேஜ் விபரம்
Glanza G MT மைலேஜ் லிட்டருக்கு 23.87 கிலோமீட்டர் G CVT, V CVT வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 19.56 கிலோமீட்டர் மற்றும் கிளான்ஸா V MT வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிலோமீட்டர் ஆகும்.
கிளான்ஸாவில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன், வாய்ஸ் கமென்டு, உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் ஏபிஎஸ் உடன் இபிடி , ரியர் பார்க்கிங் சென்சார், டூயல் டோன் அலாய் வீல் , ரீவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்றது.