புதிதாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் ரூபாய் 75.18 லட்சத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது. 2019 டிஸ்கவரி எஸ்யூவியில் S, SE, HSE மற்றும் HSE Luxury என நான்கு வேரியன்டுகளில் கிடைக்கின்றது.
237 bhp பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜினியம் டீசல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முன்பாக 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டிலும் கிடைக்கின்றது.
லேண்ட் ரோவர் டிஸ்கவரி
7 இருக்கை கொண்ட டிஸ்கவரி பெற்ற மாடல் பிரீமியம் லக்சூரி எஸ்யூவி எலெக்ட்ரிக் ரிகிளைனிங் இருக்கை, ஸ்பீளிட் ஃபோல்டிங் இருக்கை, மூன்றாவது இருக்கை வரிசை, பனாமோரிக் சன் ரூஃப், 360 டிகிரி கேமரா, அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்கின்றது.900 மிமீ வரை உள்ள நீரிலும் பயணிக்கும் வகையிலும், 3,500 கிலோ கிராம் எடை வரை சுமந்து செல்லும் திறனை பெற்றதாக அமைந்துள்ளது.
3.0 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற மாடலை விட ரூ.13 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக 37 bhp பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜினியம் டீசல் என்ஜின் பெற்றதாக அமைந்திருக்கின்றது.
லேண்ட் ரோவர் டிஸ்கவரி 2.0 லிட்டர் விலை ரூ.75.18 லட்சத்தில் வந்துள்ளது.