5 கியர்களை பெற்ற புதிய பஜாஜ் பிளாட்டினா H கியர் பைக்கினை கூடுதலான சிறப்புகளை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது.
முன்பாக 4 கியர்கள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், ஹெச் கியர் மாடலில் இனி 5 கியர் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பிளாட்டினா H கியர்
8.4 bhp பவரை வெளிப்படுத்தும் 115 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.1 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். முந்தைய மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கதாகும்.
கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என்பதனை பஜாஜ் ஆட்டோ Anti-Skid Braking System என அழைக்கின்றது. ஆன்ட்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மாடல் பிரேக் பிடிக்கும் சமயங்களில் இரண்டு பிரேக்குகள் அதாவது முன் மற்றும் பின் பிரேக்கினை இயக்கி சீரான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதானால் வாகனம் நிலை தடுமாறுவதனை பெரிதும் தடுக்கின்றது.
முதன்முறையாக 100 -125 சிசி வரையிலான சந்தையில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் இடம்பெற உள்ள செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், தவறான கியர் செலக்ஷன் எச்சரிக்கை, குறைந்த பேட்டரி எச்சரிக்கை, சர்வீஸ் ரிமைண்டர், சர்வீஸ் இன்டிகேட்டர் போன்றவை வழங்கப்பட்டு சிறப்பான இருக்கை மற்றும் பின்புறத்தில் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷனை கொண்டதாக வரவுள்ளது. 3டி பிளாட்டினம் லோகோ, டீயூப்லெஸ் டயர், புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவை பெற்றுள்ளது.
இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள H Gear என்பது “Highway Gear” என அழைக்கப்படுகின்றது. மூன்று விதமான நிறங்களில் இந்த பைக் கிடைக்க உள்ளது.
பஜாஜ் பிளாட்டினா H கியர் டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 53,376 மற்றும் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 55,373 என (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) நிர்ணயம் செய்யப்பட உள்ளது.