பஜாஜ் ஆட்டோவின் பிரபலமான சேட்டக் ஸ்கூட்டர் பெயரை மீண்டும் அர்பனைட் பிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்கூட்டர் மீதான கவனத்தை செலுத்த தொடங்கியுள்ள பஜாஜ் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்காக அர்பனைட் என்ற பிராண்டினை உருவாக்க உள்ளது. இந்த பிராண்டில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் முதல் ஸ்கூட்டர் வெளியிடப்பட உள்ளது.
பஜாஜ் அர்பனைட் சேட்டக் ஸ்கூட்டர் விபரம்
மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் மிக சிறப்பான சிங்கிள் சார்ஜிங் ரேஞ்ச் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அர்பனைட் பிராண்டின் முதல் ஸ்கூட்டர் ரக மாடலுக்கு என தனது பிரபலமான சேட்டக் பெயரை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஜிக்வீல்ஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்பாக வெளியான சோதனை ஓட்ட படங்கள் மூலம் ரெட்ரோ டிசைன் பாரம்பரியத்தை பெற்று நேர்த்தியான தோற்றத்துடன், நவீனத்துவமான டிஜிட்டல் சார்ந்த வசதிகளை பெற்ற பேட்டரி ஸ்கூட்டர் மாடலாக சேட்டக் விளங்குவதுடன் 12 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது.
வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், அப்ரானில் அமைந்துள்ள டர்ன் இன்டிகேட்டர், ஸ்டெப்டு இருக்கை கொண்டதாகவும் விளங்க உள்ள இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் பாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுகின்றது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு சவாலாக விளங்க உள்ள அர்பனைட் சேட்டக் ஸ்கூட்டர் விலை ரூ.1 லட்சம் என தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
spy image source – powerdrift , உதவி – Zigwheels