டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக லேலண்ட் விளங்குகின்றது.
இந்தியாவின் முதன்மையான பேருந்து தயாரிப்பாளர், உலகின் நான்கவது மிகப்பெரிய பஸ் தயாரிப்பாளர் என்ற பெருமையை அசோக் லேலண்ட் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
டெஸ்லா அசோக் லேலண்ட் கூட்டணி
நீண்டகாலமாக இந்தியாவில் தனது டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கான முயற்சியை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு அல்லது 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் டெஸ்லா இந்தியாவிற்கு வரும் என முன்பே அவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை டிஜிட்டல் அதிகாரி வெங்கடேஷ் நடராஜன் அளித்துள்ள பேட்டியில் அசோக் லேலண்ட் நிறுவனம், எலான் மஸ்க் உடன் இணைந்து எலெக்ட்ரிக் கார் தயாரிக்க விரும்புவதாகவும், இதன் மூலம் இந்தியர்கள் புதிய டெஸ்லா மின்சாரக் கார்களின் அனுபவத்தினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பலதரபட்ட போட்டியாளர்களுக்கு இடையில் அசோக் லேலண்ட் மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கு இடையில் இந்த கூட்டணி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்திய சந்தையில் இனி டெஸ்லா எலெக்ட்ரிக் காரினை பெறலாம்.இந்தியாவில் டெஸ்லா மாடல் 3 விற்பனைக்கு ரூ.26 லட்சம் விலையில் வெளியிடப்படலாம்.
அசோக் லேலண்ட் நிறுவனம் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வரத்தக வாகனங்களுக்கான சந்தையில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் வருமானம் 15 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ. 20,209 கோடியாக உள்ளது.