பிரபலமான ரெனால்ட் க்விட் காரின் அடிப்படையில் புதிய ரெனோ ட்ரைபர் கார் (Renault Triber) இந்தியாவில் ஜூன் 19, 2019-ல் அறிமுகம் செயப்பட்ட உள்ளது. புதிய ட்ரைபர் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள 7 இருக்கை மாடலாக வெளியிட உள்ளது.
க்விட் காரின் CMF-A பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ட்ரைபர் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டட் வசதிகளை கொண்டிருப்பதுடன், மூன்றாவது வரிசை இருக்கையை நீக்கிக் கொள்ளும் வகையில் வெளியிடும் என கருதப்படுகின்றது.
ரெனோ ட்ரைபர்
4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் கிடைக்கின்ற டட்சன் கோ பிளஸ் காரை விட சிறப்பான வசதிகளை கொண்டதாக விளங்க உள்ள புதிய ட்ரைபரில் சமீபத்தில் வெளியான வெனியூ எஸ்யூவி போன்றே ப்ளூலிங்க் டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை போன்ற நுட்பத்தினை இந்த எம்பிவி ரக காரும் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்ங்களுடன் பல்வேறு ஸ்மார்ட் சார்ந்த வசதிகளை பெற்ற 7 அங்குல தொடுதிரை சிஸ்டத்தை கொண்டிருக்கும்.
ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு இந்த மாடலை விட கூடுதலான எச்பி பவரை அதாவது 75 ஹெச்பி வரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முகப்பில் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகளை கொண்டிருக்கும் ரெனோ ட்ரைபர் காரில் டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக அமைந்துள்ளது.
ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக கார் ரூபாய் 5.50 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம்.