சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஸ்டைலிஷான சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக் மாடல் லட்சம் விலையில் ரூ. 170,655 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடல் 26.5 ஹெச்பி பவரை வழங்கும் பவர்ஃபுல்லான பைக்காக அமைந்துள்ளது.
ஜிக்ஸர் எஸ்எஃப் தொடரில் முந்தைய 155 சிசி என்ஜின் கொண்ட மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் வெளியாகியுள்ளது. இந்த மாடல் புதிய 250 சிசி என்ஜினை அடிப்படையாக கொண்ட ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ளது.
சுசுகி ஜிக்ஸர் SF 250
போட்டியாளர்களான யமஹா ஃபேஸர் 25 மற்றும் ஹோண்டா சிபிஆர்250ஆர் போன்றவற்றை விட மிக ஸ்டைலிஷாக அமைந்துள்ள இந்த பைக்கில் மூன்று பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட் , டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் போன்றவை அடிப்படையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையிலான சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் எஸ்ஓசிஎஸ் மூலம் வாகனத்தின் எடை அதிகரிக்காமல் இலகு எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
சுஸூகி ஜிக்ஸெர் SF 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.
மூன்று பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
யமஹா ஃபேஸர் 25, ஹோண்டா சிபிஆர்250ஆர், நேரடியாக எதிர்கொள்ளுகின்ற சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் விலை ரூ.170,655 (எக்ஸ்-ஷோரூம் சென்னை ) ஆகும்.