வரும் ஜூன் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டொயோட்டா கிளான்ஸாவின் தோற்ற அமைப்பு உட்பட என்ஜின் வசதிகள் என பெரும்பாலும் மாருதி சுசுகி பெலினோ காரின் அடிப்படையில் அமைந்துள்ளது.
முன்பே பல்வேறு விதமான தகவல்கள் கிளான்ஸா பற்றி வெளியாகியுள்ள நிலையில் முதற்கட்டமாக இரு வேரியன்டுகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டும் கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.
கிளான்ஸா காரின் சிறப்புகள்
குறிப்பாக முன்பக்க கிரில் அமைப்பு மட்டும் மாற்றம் பெற்று கூடுதலாக டொயோட்டா லோகோ இடம்பிடித்துள்ளது. பலேனோ காரின் நகலை போன்றே அமைந்திருக்கும் மெட்டல் சீட் , அலாய் வீல் என அனைத்தும் கிளான்ஸா காரி பெற்றிருப்பதுடன், இன்டிரியர் அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை.
5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 83 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பன்படுத்தப்பட்டு Glanza G மற்றும் Glanza V என இரு வகையான மாறுபாட்டில் மட்டும் வரவுள்ளது.
மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக தனது போட்டியால் சந்திக்க கிளான்ஸா விலை ரூ.8.00 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த காருக்கு வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது.