இந்தியாவில் விரிவடைந்து வரும் 250சிசி பிரீமியம் சந்தையில் புதிய சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக்குடன் ஒப்பீடுகையில் போட்டியாளர்களான யமஹா ஃபேஸர் 25 மற்றும் ஹோண்டா CBR250R பைக்குகளை பற்றி ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.
வரும் மே 20 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஜிக்ஸர் 250 பைக்கில் சிறப்பான பவர் மற்றும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு இந்திய இளைஞர்களை வெகுவாக கவரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
சுசுகி ஜிக்ஸர் SF 250 Vs போட்டியாளர்கள்
ஸ்டைலிங் அம்சத்தை பொருத்தவரை மூன்று மாடல்களும் மிக சிறப்பான ஃபேரிங் செய்யப்பட்டு அற்புதமான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றவை ஆகும். குறிப்பாக ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கின் வடிவம் எட்டு ஆண்டுகள் கடந்ததாகும். மற்ற இரு மாடல்களும் மிக நவீனத்துவமான அம்த்தை கொண்டதாக விளங்குகின்றது.
குறிப்பாக புதிய ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக்கின் தோற்றம் தனது பிரபலமான உயர் ரக வெர்ஷனில் இருந்து பெற்று வடிவமைத்துள்ளது. அதேபோல யமஹா நிறுவன ஃபேஸர் 25 மாடல் மிக நேரத்தியாக டிசைன் செய்யப்பட்ட ஃபேரிங் பேனல்களுடன் ஸ்டீரிட் ஃபைட்டருக்கு இணையாக அமைந்துள்ளது.
என்ஜின் பவர் மற்றும் டார்க்
ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக் மாடல் ஹோண்டாவின் சிபிஆர்250ஆர் பைக்கிற்கு இணையான பவரை வெளிப்படுதுகின்றது. இரு மாடல்களும் 26.5 ஹெச்பி குதிரைத்திறன் வெளிப்படுத்தும், அடுத்ததாக மற்றொரு பிரபலமான ஃபேஸர் 25 பைக் மாடல் போட்டியாறர்களை விட 6 ஹெச்பி பவரை குறைவாக 20.9 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றது.
மாடல் | சுசுகி Gixxer SF 250 | ஹோண்டா CBR250R | யமஹா Fazer-25 |
சிசி | 249 cc | 249.60 cc | 249 cc |
வகை | சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு, 4-வால்வு, SOHC | சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, 4-வால்வு, SOHC | சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 2-வால்வு, SOHC |
பவர் | 26.5 PS at 9,000 rpm | 26.5 PS at 8,500 rpm | 20.9 PS at 8,000 rpm |
டார்க் | 22.6 Nm at 7,500 rpm | 22.9 Nm at 7,000 rpm | 20 Nm at 6,000 rpm |
கியர்பாக்ஸ் | 6 வேக கியர்பாக்ஸ் | 6 வேக கியர்பாக்ஸ் | 5 வேக கியர்பாக்ஸ் |
விலை | ரூ.1.70 லட்சம் | ரூ.1.43 லட்சம் | ரூ.1.94 லட்சம் |
வசதிகள்
பொதுவாக மூன்று மாடல்களும் சிறப்பான முறையில் ஃபேரிங் செய்யப்பட்டு இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் கொண்டதாக வெளிப்படுத்துகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விளங்கும் யமஹா ஃபேஸர்25 மற்றும் ஹோண்டா CBR250R போன்றே ஜிக்ஸரின் எஸ்எஃப் 250 மாடலிலும் எல்இடி ஹெட்லைட் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. அடுத்தப்படியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஃபேஸர் 25 மாடல் பெற்றுள்ளது. ஜிக்ஸரும் டிஜிட்டல் முறையிலான கிளஸ்ட்டரை பெற வாய்ப்புகள் உள்ளது.
ஜிக்ஸரின் எஸ்எஃப் 250 விலை
யமஹா ஃபேஸர் 25 பைக் மாடல் நவீனத்துவமாக அமைந்திருந்தாலும் ரூ.1.43 லட்சத்தில் கிடைக்கின்றது. ஆனால் பின்தங்கிய வடிவமைப்பினை பெற்ற ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கின் விலை ரூ. 1.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுபகின்ற ஜிக்ஸர் 250 விலை ரூ.1.70 லட்சம் விலையில் அமைந்திருக்கின்றது.