புதிதாக விற்பனைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள 2019 மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் இந்தியாவில் 43.50 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூப்பர் எஸ் மாடலை விட 9.20 லட்சம் ரூபாய் விலை அதிகமாக அமைந்துள்ளது.
10 விதமான மாறுபட்ட நிறங்களில் ,பல்வேறு நவீன வசதிகளை உளடக்கியுள்ள இந்த காரில் 8.8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.
மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ்
கூப்பர் எஸ் ரக காரை விட 38 ஹெச்பி குதிரைத்திறன் கூடுதலாக வெளிப்படுத்துகின்ற ஜேசிடபிள்யூ மாடலில் மூன்று கதவுகள் வழங்கப்பட்டு 231hp பவர் மற்றும் 320Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.1 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 246 கிமீ ஆகும்.
10 நிறங்களில் குறிப்பாக ஸ்பெஷல் பச்சை நிற வண்ண மாடலில் ஆடாப்டிவ் மேட்ரிக்ஸ் ஹெட்லைட், 18 அங்குல அலாய் வீல் மற்றும் பல்வேறு ஜேசிடபிள்யூ ஆதரவுகளை பெற்றுள்ளது. மற்ற நிறங்களில் 17 அங்குல வீல் கொண்டுள்ளது.
2019 மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் 43.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.