பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட், புல்லட் எலெக்ட்ரா என இரு மோட்டார் சைக்கிளில் உள்ள பிரேக் காலிப்பர் போல்ட்டில் உள்ள கோளாறினை சரி செய்வதற்காக 7000 பைக்குகளை திரும்ப அழைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 20, 2019 முதல் ஏப்ரல் 30, 2019 வரை தயாரிக்கப்பட்ட புல்லட் 350, புல்லட் 350 ES, மற்றும் புல்லட் 500 என மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டு 7000 மோட்டார்சைக்கிள்களில் பாதுகாப்பு சார்ந்த குறைபாடுடைய பிரேக் காலிப்பர் போல்ட் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு புல்லட்
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், கடந்த மார்ச் 20, 2019 முதல் ஏப்ரல் 30, 2019 வரை தயாரிக்கப்பட்ட அனைத்து புல்லட் சீரிஸ் பைக்குகளிலும் உள்ள பிரேக் காலிப்பர் போல்ட் பிரச்சனையின் காரணமாக பிரேக் ஹோஸ் மற்றும் காலிப்பர்களில் கோளாறு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த கோளாறினை சரிசெய்வதற்காக தனது டீலர்கள் வாயிலாக திரும்ப அழைத்து முற்றிலும் இலவசமாக மாற்றித்தர உள்ளதாக ராயல் என்ஃபீல்டு குறிப்பிட்டுள்ளது.
புல்லட் 350, புல்லட் 350 ES என இரு மோட்டார்சைக்கிளிலும் 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 பைக்கில் 27.5 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி என்ஜின் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிங்க – புல்லட் டிரையல்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது