இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி பலேனோ அடிப்படையிலான மாடல் கிளான்ஸா என்ற பெயரில் டொயோட்டா விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த காரினை பற்றிய இதுவரை வெளியான முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
டொயோட்டா கிளான்சா
மாருதி-டொயோட்டா
டொயோட்டா மற்றும் சுசுகி இரு நிறுவனங்களுக்கிடைய ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் மாருதி எர்டிகா, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் சியாஸ் கார்களை டொயோட்டா பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. முதல் காராக மாருதி பலேனோ தற்போது கிளான்சா என மாறியுள்ளது.
இரு நிறுவனங்களுக்கிடைய பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் சார்ந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி, பவர்ட்ரெயின் உட்பட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான தயாரிப்பு போன்றவற்றை தயாரிக்க உள்ளன.
கிளான்ஸா ஸ்டைல் எப்படி இருக்கும்
பலேனோ காரின் நகலை போன்றே அமைந்திருக்கும் மெட்டல் சீட் , அலாய் வீல் என அனைத்தும் கிளான்ஸா கொண்டிருக்கும். குறிப்பாக முகப்பு தோற்ற அமைப்பில் கிரில், பம்பர் , பேட்ஜ் போன்றவை டொயோட்டாவின் காராக உறுதிப்படுத்தும்.
இன்டிரியர் அமைப்பில் பலேனோ போன்றே அமைந்திருக்கும் இந்த காரில் சில வசதிகள் மட்டும் கூடுதலாக அமைந்திருக்கும். 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.
பெட்ரோல் என்ஜின் மட்டும்
மாருதியின் பலேனோ காரில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஹைபிரிட் மாடலை கிளான்ஸாவும் கொண்டிருக்கும், 90 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு இரு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் G வேரியன்டில் மட்டும் பொருத்தப்பட்டு 5 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.
அடுத்தப்படியாக, க்ளான்ஸாவில் மற்றொரு பெட்ரோல் என்ஜின் 83 hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.01 கிமீ ஆகும்.
Glanza G MT மைலேஜ் லிட்டருக்கு 23.87 கிலோமீட்டர் G CVT, V CVT வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 19.56 கிலோமீட்டர் மற்றும் கிளான்ஸா V MT வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிலோமீட்டர் ஆகும்.
இந்த காரில் Toyota Glanza G மற்றும் Toyota Glanza V என இரு வேரியன்டுகள் மட்டும் கிடைக்க உள்ளது.
கிளான்சா போட்டியாளர்கள்
மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக தனது போட்டியால் சந்திக்க கிளான்ஸா உள்ளது.
கிளான்ஸா விலை மற்றும் வாரண்டி
G MT (90PS engine, mild hybrid): ரூ. 7.22 lakh
G CVT (83PS engine): ரூ. 8.3 லட்சம்
V MT (83PS engine): ரூ. 7.58 லட்சம்
V CVT (83PS engine): ரூ. 8.9 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
இந்த காருக்கு வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது. இதுதவிர வரும் காலத்தில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.