ரூபாய் 2.94 லட்சம் தொடக்க விலையில் மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 காரில் BS-VI என்ஜின், பாதுகாப்பு வசதிகள் தோற்ற அமைப்பில் மாற்றம் என பல்வேறு அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
முந்தைய மாடலை விட புதிய காரின் விலை ரூபாய் 16,000 முதல் ரூ.21,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கிராஷ் டெஸ்ட் மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ற மாடலாக வெளியாகியுள்ளது.
மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 ஃபேஸ்லிஃப்ட்
பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட முதல் பலேனோ காரை தொடர்ந்து மாருதியின் அடுத்த மாடலாக ஆல்ட்டோ 800 காரின் 800 சிசி என்ஜின் பெற்றுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள இந்த என்ஜின் அதிகபட்சமாக 48hp குதிரைத்திறன் மற்றும் 69Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த என்ஜின் நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த மேம்பாடுகள் மூலம் நச்சு காற்றான நைட்ரஜன் ஆக்ஸைடு 25 சதவீதம் வரை பிஎஸ் 6 முறையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த காரின் மைலேஜ் சரிவடைந்து லிட்டருக்கு 22.05 கிமீ ஆக உள்ளது. முன்பு பிஎஸ் 4 என்ஜின் பெற்ற ஆல்ட்டோ 800 மைலேஜ் லிட்டருக்கு 24.07 கிமீ ஆக இருந்தது.
அடிப்படையான ஒட்டுநர் ஏர்பேக் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் உட்பட ஏபிஎஸ் உடன் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட், சீட் பெல்ட் ரிமைன்டர் போன்றவற்றை கொண்டிருப்பதுடன், Automotive Industry Standard (AIS) 145 பாதுகாப்பினை கொண்ட ஸ்டீல் வடிவமைக்கப்பட்டிருக்கும். டாப் வேரியன்டில் இரு ஏர்பேக்குகள் மற்றும் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ள மாடல்களில் உள்ளது. இது சாதாரன மாடலை விட ரூ.4000 மட்டும் அதிகம்.
முன்பக்க கிரில் அமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட, புதிய பம்பர், அகலமான ஏர் இன்டேக், மெஸ் கிரில் போன்றவற்றை பெற்றுள்ளதால் வாகனத்தின் ஸ்டைலிஷ் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டு வந்த ஆல்ட்டோ 800 பேட்ஜ் கைவிடப்பட்டு ஆல்ட்டோ என மட்டும் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, இன்டிரியர் அமைப்பில் டாப் வேரியன்டில் சென்ட்ரல் லாக்கிங், கீலெஸ் என்ட்ரி, மியூசிக் சிஸ்டம் போன்றவை உள்ளது.
மாருதி ஆல்ட்டோ 800 கார் விலை பட்டியல்
Alto 800 Std | ரூ. 2.94 லட்சம் |
Alto 800 Std (O) | ரூ. 2.97 லட்சம் |
Alto 800 LXi | ரூ. 3.50 லட்சம் |
Alto 800 LXi (O) | ரூ. 3.55 லட்சம் |
Alto 800 VXi | ரூ. 3.72 லட்சம் |