இந்தியாவில் சப் காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் மிகவும் ஸ்டைலிஷாக ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு மே 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. உயர்தரமான பாதுகாப்பினை வழங்கும் நோக்கில் 69 சதவீத உயர் ரக ஸ்டீல் கொண்டு வெனியூ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது.
ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் உள்ள சிறப்புகள்
வெனியூ இந்திய சந்தையில் மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
அடுத்த பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.
அடுத்த டீசல் என்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.
ப்ளூலிங்க் டெக்னாலாஜி
7 வகையான பிரிவுகளை பெற்ற கனெக்ட்டிவிட்டி நுட்பங்களை பெற்றுள்ள இந்த வெனியூ காரில் குறிப்பாக காரினை பாதுகாக்கும் அம்சம், அவசரகால பாதுகாப்பு உரிமையாளர்களுக்கு காரின் நிலையை உடனுக்குடன் அறியும் வசதி, வாகனத்தின் பாரமரிப்பு சார்ந்த மேலான்மை வசதி என முதன்முறையாக இந்திய சந்தையில் குறைந்த விலை கொண்ட மாடலில் இதுபோன்ற அம்சங்களை இணைத்துள்ளது. இந்த காரில் வோடபோன் இ சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் நீளம் 3995 mm , அகலம் 1770 mm மற்றும் உயரம் 1590 mm ஆகும். வெனியூவின் மிகவும் தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2500 mm வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் வெனியூ எஸ்யூவியில் பாதுகாப்பு சார்ந்த ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.
ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் விலையில் வரும் மே மாதம் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் ஹூண்டாயின் அட்டகாசமான வசதிகளை கொண்ட வெனியூ விற்பனைக்கு வெளியிடப்படக்கூடும்.