இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அதிக திறன் பெற்ற 125சிசி பைக் மாடலாக விளங்கும் கேடிஎம் 125 டியூக் விலை ரூபாய் 6,800 வரை உயர்த்தப்பட்டு , தற்போது ரூ.1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்டிவ் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் டியூக் வரிசை மாடல்கள் தொடர்ந்து இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது. டியூக் 125, 200, டியூக் 250, மற்றும் 390 மாடல்கள் தொடக்கநிலை சந்தையில் பெரிதும் இளைய தலைமுறையினரை கவர்துள்ளது.
125 சிசி டியூக்கில் உள்ள 95 சதவீதம் வடிவமைப்பு இந்தியாவில் விற்பனையில் உள்ள 200 சிசி டியூக் மாடலை பின்பற்றியதாகும். 125 டியூக் மாடலின் சேஸ், சஸ்பென்ஷன், சக்கரங்கள் மற்றும் பேனல்களை 200 டியூக்கிலிருந்து பெறப்பட்டுள்ளன.
கேடிஎம் டியூக் 125 மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 15 bhp ஆற்றல் 9,500rpm மற்றும் 11.8Nm டார்க் கொண்டதாக இருக்கின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் பின்புற டயரில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1.25 லட்சத்தில் கிடைக்கின்ற மற்ற நிறுவன மாடல்கள் பொதுவாக 200சிசி என்ஜின்களை பெற்றுள்ளது. இதன் போட்டியாளராக அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, யமஹா எம்டி-15, பல்சர் 200 போன்றவை ஆகும்.