இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, 350 ES மாடலில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புல்லட் 350 ES மாடலிலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
புல்லட் 350 மாடல் விலை ரூபாய் 1.21 லட்சம் எனவும், புல்லட் 350 ES மாடல் விலை ரூபாய் 1.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350
சமீபத்தில் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் பைக்கின் அடிப்படையில் புல்லட் டிரையல்ஸ் 350 , 500 என இரு மாடல்களை ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அறிமுகம் செய்திருந்தது.
ஏப்ரல் முதல் இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படுவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன.
இரு மோட்டார்சைக்கிளிலும் 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
பொதுவாக என்ஃபீல்டின் அனைத்து மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் புல்லட் 350, 350 இஎஸ் என இரு மாடல்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு, கூடுதலாக பின்புற சக்கரத்தில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்ஷன் (RLP -Rear-wheel Lift-off Protection) வசதி வழங்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக புல்லட் 350 பைக்கில் டிஸ்க் பிரேக் முன்புறத்தில் வழங்கப்பட்டு பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற புல்லட் 350 மாடலில் இருபுறமும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள் உதவி – ஆட்டோகார் இந்தியா