நடந்து முடிந்த 2018-19 ஆம் நிதி ஆண்டில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் சுமார் 183,787 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2017-2018 ஆம் நிதி வருடத்தில் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டில், 170,026 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மாரச் 2019 மாதந்திர விற்பனையில் 17,202 யூனிட்டுகளை விற்றுள்ளது.
ஹோண்டாவின் கார் விற்பனை நிலவரம்
கடந்த 2018 மார்ச் மாதத்தில் ஹோண்டா கார் பிரிவு சுமார் 13,574 வாகனங்களை விற்றிருந்த நிலையில், இந்த வருடம் அதே மாத முடிவில் 27 சதவீதம் வளர்ச்சி அடைந்து 17,202 யூனிட்டுகளை விற்றுள்ளது.
விற்பனை குறித்து கருத்து தெரிவித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் மற்றும் மூத்த தலைவர் ராஜேஸ் கோயல், மிக கடுமையான போட்டி நிறைந்த சூழ்நிலையில் , சிறந்த டீலர்கள் மற்றும் நிறுவனத்தின் முயற்சியால் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் புதிய அமேஸ் கார் மற்றும் சமீபத்தில் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் சிவிக் மற்றும் சிஆர்-வி எஸ்யூவி போன்ற மாடல்களில் வெளியான பிரிமியம் ரக ஹோண்டா சிவிக் காருக்கு அமோக வரவேற்பினை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க – 45 நாட்களில் 2400 முன்பதிவை பெற்ற சிவிக் கார்